For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தமிழகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

06:17 AM Mar 13, 2025 IST | Ramamoorthy S
தமிழகத்தில் ஏப்ரல் 8 ம் தேதி  முதல் தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு   பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புக்கு திருத்தப்பட்ட விரிவான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்டது. அ

Advertisement

அதன்படி 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள், ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத்தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி, 21-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 15-ல் தொடங்கி 21-ம் தேதி வரையும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து வித பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement
Tags :
Advertisement