தமிழகத்தில் SILENT OPERATION - நயினார் நாகேந்திரன் பேச்சு!
06:33 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
பொய், புரட்டு பேசி மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் திமுக ஆட்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், ஹரியானாவில் பாஜக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தவர் அமித்ஷா என்றார்.டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியவர் அமித்ஷா என்றும், தமிழகத்தில் அமித்ஷா சைலண்ட் ஆப்ரேஷன் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
Advertisement
திமுக-வினர் தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கின்றனர் என்றும், பொய், புரட்டு பேசி மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் திமுக ஆட்சி என்றும் அவர் கூறினார்.
அமித்ஷா பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு ஷாக் அடிக்கிறது என்றும், பாஜக எம்.எல்.ஏ-க்களை யாத்திரையாக பேரவைக்கு அழைத்து செல்வதே இலக்கு என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement