தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!
12:34 PM Nov 04, 2025 IST | Murugesan M
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையவும், போலி வாக்காளர்களை நீக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 543 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் காலை முதல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுடன் அரசியல் கட்சிகளில் பூத் ஏஜெண்டுகள் உதவியாகப் பணியாற்றி வருகின்றனர்.
Advertisement
Advertisement