For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா - நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

10:23 AM Jul 06, 2025 IST | Ramamoorthy S
தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா   நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

தமிழ்நாடு பாஜக இளைஞரணி சார்பில், நடைபெற்ற 'மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றகார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் இருண்ட மற்றும் அவமானகரமான காலத்துக்கு காரணமான சட்டம் நடைமுறைக்கு வந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதை நினைவு கூறும் விதமாக, சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாஜக இளைஞரணி சார்பில், 'மாதிரி நாடாளுமன்ற கூட்டம்' நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, எமர்ஜென்சியின் கொடுமைகள் குறித்து உரையாற்றியதாக கூறியுள்ளார்.

இதில் பங்கேற்ற இளைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் ஊட்டும் விதமாக விவாதம், மேடைப் பேச்சு, அரசியல் குறித்த பயிற்சி உள்ளிட்ட பல அமர்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement