தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் - அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் பாஜக மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். தனியார் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு விழா மேடைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழ் கடவுளான முருகனின் சிலை மற்றும் வேல் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2026 சடட்ப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார.
தான் எங்கு சென்றாலும் என்னுடைய சிந்தனை தமிழகத்தில் மேல் தான் உள்ளது என்றும், தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்ததாகவும் அதற்கு தமிழகம் உள்ளிட்ட நாடு முழு ஆதரவு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானின் ட்ரோன்கள் மறறும் ஏவுகணையை தடுத்து வீழ்த்தியதன் மூலம் இந்திய ராணுவத்தின் வல்லமை உலக அளவில் பேசப்படுவதாகவும் கூறினார். டாஸ்மாக்கில் சுமார் 35, 775 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவிற்கு எப்படி வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்று வெற்றி அடைய செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.