தமிழ்நாடு - ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!
தமிழ்நாடு - காஷ்மீர் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் தெற்கு பகுதிகளான கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை இந்த புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதி வேகத்தில் செல்லும் அம்ரித் பாரத் ரயிலானது, ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கக்கூடியது. மேலும், நாட்டின் குறுகிய பாதைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.
தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி - ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது