மகாராஷ்டிராவில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் - தண்டவாளத்தில் தவறி விழுந்த 5 பேர் உயிரிழப்பு!
11:16 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
மும்பை அடுத்த தானே ரயில் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையத்திற்கு புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. தானே அடுத்த மும்ப்ரா ரயில் நிலையத்திற்கு வந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக பலர் தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Advertisement
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகமும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement