தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!
07:30 PM Jun 28, 2025 IST | Murugesan M
தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாய்லாந்துக்கும் அதன் அண்டை நாடான கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது.
Advertisement
இதுதொடர்பாக, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், செனட் சபைத் தலைவருமான ஹுன் சென்னுடன், தாய்லாந்து பிரதமர்ப் பேதொங்தார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் பேசிய ஆடியோ கசிந்தது.
இது, தாய்லாந்து பிரதமருக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தாய்லாந்து பிரதமருக்கு எதிராகப் பாங்காக்கின் வெற்றி நினைவுச் சின்னத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement