For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

12:33 PM Jul 04, 2025 IST | Ramamoorthy S
தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை   உச்ச நீதிமன்றம்

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவிலன் 2014ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் உயிரிழந்த ரவிஷா என்பவரின் குடும்பத்தினர் 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisement

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ரவிஷாவின் குடும்பத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு, போலீசாரின் குற்றப்பத்திரிகை தெளிவாக உள்ளதால், வாரிசுகள் இழப்பீடு கோர உரிமையற்றவர்கள் என தெரிவித்தனர்.

மேலும், காப்பீடு நிறுவனமும் இத்தகைய இறப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement