திண்டுக்கல் : ஜல்லிக்கட்டு போட்டி: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு!
05:55 PM Feb 04, 2025 IST | Murugesan M
திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டியில், புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, வரும் 7-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.
Advertisement
போட்டியில், திருச்சி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே, வாடிவாசல் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவற்றில் ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், "நீதிமன்ற உத்தரவின்படி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?" என்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை கோட்டாட்சியர் சக்திவேல் நேரில் ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement