For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

07:13 PM Jul 05, 2025 IST | Murugesan M
திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது   நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் ஆசிரியர்களை திமுக அரசு வதைத்து வருவது கண்டனத்திற்குரியது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து ஒரு வருடம் ஆன பின்பும் பணி நியமன ஆணை வழங்க இயலாத அளவிற்கு திமுக அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறதா? ஒரு புறம் ஆசிரியர்கள் இன்றி பல அரசுப்பள்ளிகள் அல்லல்படும் வேளையில், மறுபுறம், கலை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வித்துறை முற்றிலும் முடங்கி உள்ளது.

Advertisement

ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசோ, இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாதது, உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுகளை நடத்தாது காலம் தாழ்த்துவது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காதது என தனது திறனற்ற செயல்பாட்டால் கல்வித்துறையை மேலும் சீரழித்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

தமிழக கல்வித்துறையின் மீதும், தமிழக மக்களின் எதிர்காலம் குறித்தும் சிறிதேனும் அக்கறை இருந்தால், இதற்கு மேலும் காலந்தாழ்த்தாமல், தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கவும், கல்லூரிகளில் போதிய பேராசிரியர்களை நியமிக்கவும் வேண்டும் என முதல்வர்  ஸ்டாலினை நயினார் நாகேந்திரன்   வலியுறுத்தி உள்ளார்.

Advertisement
Tags :
Advertisement