For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் - வினோஜ் பி செல்வம்

06:15 PM Nov 05, 2025 IST | Ramamoorthy S
திமுகவிற்கு சார் என்றாலும் பயம்  s i r என்றாலும் பயம்   வினோஜ் பி செல்வம்

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், எஸ்.ஐ.ஆர் என்றாலும் பயம் என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் விமர்சித்துள்ளார்.

கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வினோத் பி செல்வம் கலந்து கொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய திட்டங்களை திமுக எதிர்த்தாலே அதில் தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது என்று தான் அர்த்தம் என தெரிவித்தார்.

தற்போது  SIR என்பது காலத்தின் கட்டாயம், இதனால் திமுகவிற்கு கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தின் காரணமாக இந்த SIR- ஐ எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளதாகவும். தற்போது உள்ள சூழ்நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement