திமுக எம்பிக்கள் ஜனநாயகமற்றவர்கள் : மத்திய அமைச்சரின் கருத்துக்கு 97 சதவீத மக்கள் ஆதரவு!
திமுக எம்பிக்களை ஜனநாயகமற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது சரிதான் என 97 சதவீத தமிழக மக்கள் தமிழ் ஜனம் நடத்திய டிஜிட்டல் கருத்துக் கணிப்பில் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் போது தொகுதி மறுசீரமைப்பு, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்பிக்கள் ஜனநாயகமற்றவர்கள் என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான் பேசியது குறித்து தமிழ் ஜனம் டிஜிட்டல் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் திமுக எம்பிக்கள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது சரிதான் என 97 சதவீத தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் மட்டுமே மத்திய அமைச்சர் கூறியது தவறு என வாக்களித்துள்ளனர்.