திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!
11:21 AM Nov 04, 2025 IST | Murugesan M
தருமபுரி அருகே திமுக கொடி கம்பங்களை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
நல்லம்பள்ளி அருகே நடைபெற்ற தருமபுரி திமுக எம்பி ஆ.மணியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
Advertisement
இதற்காகச் சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள் இரும்பு கம்பிகளில் பறக்கவிட்டன.
விழா முடிந்ததும், கட்சி கொடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் இருந்த மின் ஒயர், கட்சி கொடி கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பம் மீது உரசி உள்ளது. இதில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி ஜீவா உயிரிழந்தார்.
Advertisement
Advertisement