திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை!
06:53 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் 3-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், 3-வது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement