For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

12:50 PM Feb 19, 2025 IST | Ramamoorthy S
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்   திரளான பக்தர்கள் பங்கேற்பு

17 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில், இடைக்கால சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டுமான பணிகள்தொடங்கப்பட்டன. திருவண்ணாமலையில் 15 ஆம் நூற்றாண்டில் பிறந்த அருணகிரிநாதரால் பாடல்பெற்ற இக்கோவில், முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் புகழ் பெற்றது.

Advertisement

மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமியையும், அதன் அருகே மற்றொரு கர்ப்ப கிரகத்தில் ஆதிநாதர் மற்றும் அவரது துணைவி ஆதிநாயகி வடிவிலான சிவபெருமானும் உள்ளனர்.

இக்கோவில்  திருப்பணிகள் சுமார் ரூ.30 கோடி செலவில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்ட3ன. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கண்பதி ஹோமம், நவ கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை ஆகிய யாகசாலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. மூலஸ்தானத்திலிருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

தொடர்ந்து காலை 9.50 மணிக்கு மூலாலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலையை தடுக்க வயலூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement