For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

08:18 AM Oct 11, 2025 IST | Ramamoorthy S
திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை

திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்டாரமடம் - தாமரைமொழி பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் என்பவர், தனது சகோதரியின் கணவரை வெட்டிக் கொன்ற வழக்கில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.

Advertisement

காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் சின்னத்துரையுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த மர்மகும்பல், இருசக்கர வாகனம் மீது காரால் மோதியது. உயிர் பயத்துடன் தோட்டத்திற்குள் ஓடிய சிவசூரியனை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement

இதுதொடர்பாக 4 பேர் கைதான நிலையில், பழிக்குப்பழியாக கொலை அரங்கேறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement