திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா : மார்ச் 3-ஆம் தேதி தொடக்கம்!
12:40 PM Feb 27, 2025 IST | Ramamoorthy S
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
மாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்றும், மார்ச் 14-ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement