திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
07:40 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.
Advertisement
இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ந் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவானது காலை ஆறு பதினைந்து மணி முதல் ஆறு ஐம்பது மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement