For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

04:44 PM Jun 09, 2025 IST | Murugesan M
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்   திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திருப்பணிக்காகத் தோண்டப்பட்ட 8 அடி ஆழப் பள்ளத்தில் இறங்கி பக்தர்கள் ஆபத்தான முறையில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைக்குச் செல்லும் வழியில் திருப்பணிகளுக்காக பெரும் பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்த நிலையில், கூட்டம் காரணமாகப் பக்தர்கள் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச்சுவர் மீது ஏறிச்சென்றனர்.

Advertisement

மேலும், அந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இல்லாததால், ஒருவழிப்பாதையில் பக்தர்கள் சென்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

வைகாசி விசாக திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement