திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்!
05:15 PM Jun 10, 2025 IST | Murugesan M
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள உற்சவர் மீதான தங்கக் கவசம் அகற்றப்பட்டு வைர கவசம் பொருத்தப்பட்டது.
ஜேஷ்டாபிஷேகம் என்பது கோயில் உற்சவர்களுக்குப் பொருத்தப்பட்டிக்கும் கவசங்களை அகற்றி புதிய கவசங்களைப் பொருத்தும் நிகழ்ச்சியாகும்.
Advertisement
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடப்பாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை முத்து கவசத்திலும், நாளை மறுநாள் தங்கக் கவசத்திலும் உற்சவர் காட்சியளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement