திருமணத்திற்கு வராத மணமகன் - காவல் நிலையத்தில் புகார் அளித்த மணமகள் தரப்பு
08:42 AM Feb 04, 2025 IST | Sivasubramanian P
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
மேலப்பெருங்கரை கிராமத்தைக் சேர்ந்த மதுரைமன்னன் - ராஜலட்சுமி தம்பதியின் மகள் குஷியாகாந்தி. இவருக்கும் அலங்கானூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவந்தன.
Advertisement
ஆனால், திருமணத்துக்கு மாப்பிளை வீட்டார் வராததால் அதிர்ச்சியடைந்த குஷியாகாந்தி, அவர்களை தொடர்புகொண்டுள்ளார். அப்போது அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, பரமக்குடி மகளிர் காவல்நிலையத்தில் பெண் வீட்டார் புகாரளித்தனர்.
Advertisement
Advertisement