திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் - சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
08:30 PM Mar 23, 2025 IST | Ramamoorthy S
விடுமுறை தினமான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
அந்தவகையில், விடுமுறை தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் 4 மணி நேரமாக காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.
Advertisement
Advertisement