திருவள்ளூர் : மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
12:33 PM Feb 05, 2025 IST | Murugesan M
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குமரன் நகர் பகுதிக்கு லாரியில் மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு இரவு நேரங்களில் எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அப்பகுதி அருகே டன் கணக்கில் மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்த லாரியை மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
Advertisement
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement