திவ்யபாரதியுடன் காதலா? - மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!
05:42 PM Feb 21, 2025 IST | Murugesan M
ஜி.வி.பிரகாஷூம் - நடிகை திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளனர்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவியை விவாகரத்து செய்தார். அவர்களது விவாகரத்துக்கு காரணம் நடிகை திவ்யபாரதிதான் என சமூகவலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
Advertisement
அவர் ஜி.வி.பிரகாஷூடன் டேட்டிங் செல்வதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஜி.வி.பிரகாஷ், தாங்கள் இருவருமே நண்பர்கள் மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இருவரும் வெளியில் எங்கும் சந்தித்துக் கொண்டதில்லை எனவும், திரையில் தங்கள் இருவரின் நடிப்பும் பேசப்படுவதால் மக்கள் அவ்வாறு நினைக்கலாம் எனவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement