துருக்கியில் நிலநடுக்கம் - 7 பேர் காயம்!
02:08 PM Jun 04, 2025 IST | Murugesan M
துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் மர்மரிஸ் நகரில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், இரவில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சத்துடன் எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
Advertisement
சிலர் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். இதில் காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2023ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement