தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை - அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!
01:34 PM Nov 04, 2025 IST | Murugesan M
தென்காசி ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரப் பயிற்சி கூட்டத்தில் போதிய இருக்கைகள் இல்லாததால் அதிமுக, நாதக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் இன்று தொடங்க உள்ளது. இது தொடர்பாகத் தென்காசி ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துக் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்குப் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
Advertisement
அப்போது, முறையாக இருக்கைகள் வழங்கவில்லை எனக் கூறி அதிமுக, நாதக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement