தென்காசி : மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டப்பட்ட படிக்கட்டுகள்!
01:58 PM Apr 16, 2025 IST | Murugesan M
தென்காசியில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து பள்ளி கட்டடம் கட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாவூர் சத்திரத்தை அடுத்த கொண்டலூரில் அரசுப் பள்ளிக்கு 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டது.
Advertisement
ஆனால் அருகில் உள்ள மின் கம்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டடத்தின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலனில் அக்கறையின்றி அலட்சியத்துடன் கட்டடப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement