For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

02:24 PM Jun 06, 2025 IST | Murugesan M
கன்னியாகுமரி   சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை   நீதிமன்றம் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கடியபட்டணம் அருகே நகைக்காக நான்கு வயது சிறுவனைக் கொன்று, சடலத்தைப் பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு கடியப்பட்டணம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஜான் ரிச்சார்ட் என்பவரின் 4 வயது மகனை, பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாத்திமா என்பவர் கடத்தி, கொலை செய்து சடலத்தைப் பீரோவில் மறைத்து வைத்தார்.

Advertisement

இது கொலை வழக்கில் பாத்திமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வகுக்கு விசாரணை பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றவாளி பாத்தி மாவுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement