தேனி : முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்!
தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவை சரியான நேரத்தில் பெய்தது. இதனால் பெரியகுளம், ஆண்டிகுளம், பூலாங்குளம் உள்ளிட்ட குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நல்ல விளைச்சலைக் கண்டன.
இந்நிலையில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பருவம் தவறாமல் பெய்த மழையால், நடப்பாண்டு முதல் போக நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 35 முதல் 40 மூடை அறுவடையாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நெல் மூடைகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.