தைப்பூச திருவிழா - பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!
06:21 AM Feb 11, 2025 IST | Ramamoorthy S
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Advertisement
பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் முத்துகுமார சுவாமி வள்ளி - தெய்வானை சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி வழிபட்டனர்.
Advertisement
Advertisement