நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது!
05:48 PM May 02, 2025 IST | Murugesan M
'ரசவாதி' திரைப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அர்ஜுன் தாஸ், 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார்.
Advertisement
தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், 'ரசவாதி' படத்தில் நடித்ததற்காக நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
விரைவில் நடக்கவுள்ள தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் அவர் இந்த விருதைப் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement