நடிகர் கமல்ஹாசனுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
05:55 PM May 30, 2025 IST | Murugesan M
நடிகர் கமல்ஹாசனுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தைச் சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல் என அறிக்கையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement