For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நடிகர் ராஜேஷ் காலமானார் - திரை பிரபலங்கள் அஞ்சலி!

11:17 AM May 29, 2025 IST | Ramamoorthy S
நடிகர் ராஜேஷ் காலமானார்   திரை பிரபலங்கள் அஞ்சலி

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராஜேஷ் தனது 75வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராஜேஷூக்கு இன்று காலை தீடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிர் பிரிந்தது. இதனையடுத்து அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பிறந்த ராஜேஷ் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். இவர் கடந்த 1974ல் கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், வில்லன், குணச்சித்ரம், தர்மதுரை என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement