For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி - தனிநபர், வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைகிறது!

01:19 PM Feb 07, 2025 IST | Ramamoorthy S
நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி   தனிநபர்  வீடு  வாகனங்களுக்கான வட்டி குறைகிறது

வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்தார்.

Advertisement

தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ள நிலையில், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைந்ததால் தனிநபர், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையவுள்ளது.  பட்ஜெட்டில் 12 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், ரெப்போ வட்டி வீதமும் குறைந்ததன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் நிதிச்சுமை பெருமளவில் குறையும் என பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement