For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

06:32 PM Jun 23, 2025 IST | Murugesan M
நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம்   தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

செங்கல்பட்டு அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களை வனப்பகுதிக்கு மாற்றும் தமிழக அரசின்  முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சரப்பாக்கம், செய்யூர், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் வசித்து வந்த நரிக்குறவ சமூக மக்கள் அனைவரும் அரசின் உத்தரவின் படி இரும்புலி ஊராட்சியின் சிறுகிரணை பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாக குடியமர்த்தப்பட்டனர்.

Advertisement

குடிநீர், சாலை, மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லாமல் வசித்து வரும் நரிக்குறவ சமூக மக்களை தற்போது வனப்பகுதிக்கு அருகே குடியமர்த்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வசித்துவரும் நரிகுறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்பும், அவர்களுக்கான எந்தவித பலனும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுராந்தகம் அருகே வனப்பகுதியில் இலவச வீடு கட்டித்தருவதாகக் கூறி  20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நரிக்குறவ மக்களை சிறுகரனை பகுதியில் இருந்து வெளியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

பல ஆண்டுகளாகப் போராடி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாளங்களைப் பெற்றிருக்கும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பறிபோவதோடு, வனத்துறையின் தொந்தரவும் அதிகமாக இருக்கும் என்பதால் இடமாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டிருக்கும் நரிக்குறவ சமூக மக்களைப் பழங்குடியின சமூகத்தில் இணைத்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஆறுதல் அளித்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற முடியாத வகையில் இடமாற்றம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement