நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
12:47 PM Jun 10, 2025 IST | Murugesan M
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது.
Advertisement
இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா பாதித்த யாரும் உயிரிழக்கவில்லை எனவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
இதில் அதிகபட்சமாகக் கேரளாவில் ஒரே நாளில் 144 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அங்கே மொத்த பாதிப்பு 1957-ஆக உள்ளது.
Advertisement
Advertisement