நாளை கூடுகிறது நாடாளுமன்றம் - வக்ஃபு மசோதா, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்!
06:30 PM Mar 09, 2025 IST | Ramamoorthy S
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது.
நாடாளுமன்ற கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்குகிறது.
Advertisement
வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவது குறித்து இந்த கூட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என கூறப்படும் நிலையில், தேசிய கல்விக் கொள்கை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்புகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement