நிதிப் பற்றாக்குறையை வரி விதிப்புகளால் மட்டுமே சரிசெய்ய முடியும் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
12:34 PM Apr 07, 2025 IST | Murugesan M
சீனா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான நிதிப் பற்றாக்குறையை வரி விதிப்புகளால் மட்டுமே சரிசெய்ய முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
Advertisement
சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளுடன் தமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது என்றும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி வரி விதிப்புகள் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அதிபர் ஜோ பைடன் காலத்தில் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் உபரியாக வளர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், விரைவாக அதனை மாற்றப்போகிறோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவிற்கான வரிகள் மிகவும் அழகான விஷயம் என்பதை மக்கள் ஒரு நாள் உணர்வார்கள் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement