நியூசிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!
05:27 PM Jun 06, 2025 IST | Murugesan M
நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
Advertisement
இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டீட் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்தே அப்பொறுப்பில் தற்போது ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளார். வால்டரின் பதவிக்காலம் ஜூன் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி 2028 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதி வரை நீடிக்கும்.
Advertisement
Advertisement