நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!
01:23 PM Jun 07, 2025 IST | Murugesan M
நடிகர் நாகார்ஜூனா - அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை திருமணம் செய்து கொண்டார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Advertisement
வரும் 8-ம் தேதி நாகார்ஜூனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணத்திற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள் நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும்.
Advertisement
Advertisement