நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் - ஹெச்.ராஜா உறுதி!
07:45 PM Jun 07, 2025 IST | Ramamoorthy S
நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் என்றும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். திமுக களையப்பட வேண்டிய கட்சி என தெரிவித்த அவர், 2026-ஆம் ஆண்டு தேர்தலில் ஊழல் போதை அரசு வீழ்த்தப்படும் என்றார். நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Advertisement
Advertisement
Advertisement