நெல்லை மாநகராட்சியில் சாக்கடை குளியல் போராட்டம் நடத்திய காங்கிரசார்!
01:23 PM Apr 16, 2025 IST | Murugesan M
கழிவுநீர் ஓடை பணியைத் தொடங்க கோரி நெல்லையில் காங்கிரசார் சாக்கடை குளியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தங்களது உடலில் சாக்கடை நீரை ஊற்றிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் கூட்ட அரங்கிற்கு வந்தனர்.
Advertisement
பாளை மண்டலம் 32வது வார்டில் பல ஆண்டுகளாகக் கழிவு நீரோடை சேதமடைந்துள்ளதால், வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
Advertisement
Advertisement