For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

01:04 PM Mar 13, 2025 IST | Murugesan M
பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரில் உள்ள சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி, பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டே இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இருப்பினும் பழைய உத்தரவுகளை மறைத்துவிட்டு தற்போது அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Advertisement
Tags :
Advertisement