பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் : யோகி ஆதித்யநாத்
06:59 PM Mar 12, 2025 IST | Murugesan M
ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
லக்னோவில் நடந்த மானிய விநியோக நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஹோலி மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement
இதற்காக மாநில அரசு சார்பில் 1,890 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement