பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி படுகொலை - அண்ணாமலை கண்டனம்
06:57 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஏற்கனவே இது போன்ற குற்றங்களுக்காக, சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மறுபடியும், தனியாக வசித்து வரும் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்வது, பலத்த கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement