400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் - உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!
08:11 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படை தளம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியது. ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.
Advertisement
இந்த போர் துவங்கியதற்கு பிறகு, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
Advertisement
Advertisement