பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் : 155 பயணிகளை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படை!
03:15 PM Mar 12, 2025 IST | Murugesan M
பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 155 பயணிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலை பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் சிறை பிடித்ததாகவும், அதில் பயணித்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தகவல் வெளியானது.
Advertisement
இந்த நிலையில், பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 155 பேரை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீதமுள்ள 200-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரயிலை கடத்தி பயணிகளை சிறைபிடித்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தை சேர்ந்த 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement