For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் : சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்பது போர் விமானங்கள்!

11:35 AM Jun 05, 2025 IST | Murugesan M
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார்   சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்பது போர் விமானங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது அந்நாட்டின் ஒன்பது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரில் வான் வழியாக நடந்த தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள், 2 விலை உயர்ந்த கண்காணிப்பு விமானங்கள், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் பல்வேறு ட்ரோன்களையும் ராணுவப்படை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பொலாரி விமான தளத்தில் இருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பு விமானமும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்திய ராணுவப் படையின் தாக்குதலில், சீன தயாரிப்பான 'விங் லுாங்' ஆளில்லா விமானங்களும் வீழ்த்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இடிபாடுகளைப் பாகிஸ்தான் இன்னும் அகற்றாததால், பாதிப்பு விபரங்களைக் கணக்கிட முடியவில்லை எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement