பாஜக - அதிமுக இடையே கூட்டணி உறுதியானது - அமித் ஷா
07:10 PM Apr 11, 2025 IST | Murugesan M
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி உறுதியானதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Advertisement
அப்போது பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாஜக - அதிமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்த அமித்ஷா, இந்தக் கூட்டணியால் இரு கட்சிகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement